
பிரிவினைவாதிகளின் கைக்கூலி சாணக்கியன்
பிரிவினைவாதிகளின் கைக்கூலியான சாணக்கியன் தனது முதல் எதிரியாக என்னையே பார்க்கின்றார் .அவர் பணம்தந்தால் அவருக்காகவும் நான் நீதிமன்றத்தில் வாதாடுவேன். ஏனெனில் எனது தொழில் சட்டத்தரணி என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன் எம்.பி முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
பிரிவினைவாதிகளின் கைக்கூலியான சாணக்கியன் எம்.பி. இடமிருந்து இதைவிட ஒரு பேச்சை எதிர்பார்க்க முடியாது. எப்போதும்நாட்டுக்க முன்னிலையாகும் நானே அவரின் முதல் எதிரி என்று அவர் கருதுகிறார்.
கோத்தபாய ராஜபக்ஸ வின் வழக்கில் ஆஜரானது தொடர்பில் கூறுகின்றார். நான் ஒரு சட்டத்தரணி .அதுதான் எனது தொழில்.. என்னிடம் வழக்குகளுக்கு வருபவர்களிடம் நான் இனம் மதம் குணம் பார்ப்பதில்லை. நான் நாளை அமைச்சு பதிவியிலிருந்து விலகி சட்டத்தரணி தொழிலுக்கு மீண்டும் சென்றால் கோத்தபாய ராஜபக்ச மீண்டும் கேட்டால் கூட நான் வாதாடுவேன் சாணக்கியன் எம்.பி. பணம் தந்தால் அவருக்காகவும் வாதாடுவேன்.
திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரவில்லை என்கின்றார். அது பொலிஸாரின் வேலை. நாம் அரச அதைகாரிகள். எம்மால் போய் ஒவ்வொருவரின் வீட்டுக்கதவுகளையும் தட்ட முடியாது. எனவேமுட்டாள்தனமாக் பேசக்கூடாது என்றார்.

