வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கை கடல் குத்தகைக்கு

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கை கடல் குத்தகைக்கு

இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்புகளையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் மீனவர்களை கடலில் இருந்து அகற்றுவதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் சட்டத்தின் மூலம் இலங்கை மீனவர்கள் சம்பந்தப்பட்ட கடற்பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டம் ஒரு புரளி எனவும் மீனவர்களை கடலில் இருந்து அகற்றுவதற்கே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடற் பகுதிகளுக்கு இலங்கை மீனவர்கள் உள்ளே நுழைந்தால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.

தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சீன நிறுவனங்களுக்கு கடலை பகுதிகளாக குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் பணிப்பாளர் நாயகத்துக்கு உரிமம் வழங்கும் அதிகாரமும் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )