
நாட்டில் 3000 பேரில் ஒருவருக்கு எய்ட்ஸ்
நாட்டின் மொத்த சனத்தொகையில் 3000 பேரில் ஒருவர் எய்ட்ஸ் நோயாளராக உள்ளார் .அதாவது நாபிடில் தற்போது 6000 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனை அலட்சியப்படுத்த முடியாது.எனவே பாலியல் நோய் தடுப்பு தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் சுயாதீன எதிரணி எம்.பி.யுமான சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
மருந்து ஒழுங்குப்படுத்தல் சட்டம் தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமற்றது.ஆகவே தற்போதைய நிலைக்கு அமைய அந்த சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும்.மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் 50 அரச மருந்தகங்கள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும்.
மருத்துவ துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் சமூக கட்டமைப்பில் பாலியல் ரீதியிலான நோய் தாக்கங்கள் தீவிரமடைந்துள்ளன.அண்மைய கணக்கெடுப்புக்கு அமைய நாட்டில் 6000 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இதற்கமைய மொத்த சனத்தொகையில் 3000 பேரில் ஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.இதனை அலட்சியப்படுத்த முடியாது.எனவே பாலியல் நோய் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை விரிவு படுத்த வேண்டும் என்றார்.

