நிலம், கடலுக்கு மட்டுமல்ல நினைவேந்தலுக்கும் அடக்குமுறை; தொடர்ந்தால் மக்கள் கிளர்ந்தெழுவார்கள்

நிலம், கடலுக்கு மட்டுமல்ல நினைவேந்தலுக்கும் அடக்குமுறை; தொடர்ந்தால் மக்கள் கிளர்ந்தெழுவார்கள்

எங்களுடைய மக்கள் மீது தொடர்ந்தும் நில அடக்குமுறை, கடல் அடக்குமுறை,நினைவேந்தல் அடக்குமுறை என தொடருமாக இருந்தால் எமது மக்கள் கிளர்ந்தெழுவார்கள். எனவே அவ்வாறான சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டாமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யும் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்த்தில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

வவுனியா நகரசபையை மாநகரசபையாக்கிய, அபிவிருத்தி செய்வதற்கான மாவட்டமாக வவுனியாவை தெரிவு செய்தமை ஆகியவற்றுக்கு பிரதமருக்கு நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.

மன்னார் நகரசபையை மாநகரசபையாக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை . மடு பிரதேச சபையை தனி பிரதேச சபையாக தரமுயர்த்த வேண்டும். இந்த கோரிக்கைகளை அபிவிருத்திக்குழு ஊடாக உங்களுக்கு அனுப்பி வைத்தோம். இன்றுவரைக்கும் இது தொடர்பில் முன்னேற்றம் இல்லை. ஒட்டுசுட்டானும் தனிப் ப்பிரதேச சபையாக தரமுயர்த்தப்பட வேண்டும். வவுனியா பிரதேச சபை நகரசபையாக தரமுயர்த்தப்பட வேண்டும். மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவு இரண்டாகப்பிரிக்கப்பட வேண்டும். வவுனியா பிரதேச செயலக பிரிவும் இரண்டாகப்பிரிக்கப்பட்டு ஓமந்தை தனிப்பிரதேச செயலகமாக மாற்றப்பட வேண்டும்

இந்த நாட்டில் நகரசபையோ மாநகர சபையோ இல்லாத இரு மாவட்டங்கள் உள்ளன. இதில் ஒரு மாவட்டம் கிளிநொச்சி.இன்னொரு மாவட்டம் முல்லைத்தீவு. இதனை பிரதமர் கவனத்தில் எடுக்க வேண்டும்.

மன்னார் மாவட்ட அரச அதிபர் ஓய்வு வயதின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. எனவே உடனடியாக அரச அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

எமது மாவட்டத்தில் கிராம சேவையாளர்கள் 3,4 கிராமங்களை பார்க்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வன்னி மாவட்ட பிரதேச செயலாளர்கள் மிக நேர்த்தியாக வேலை செய்தாலும் அரசியல் தலையீடுகள் அவர்களை கட்டுப்படுத்துகின்றன.

நிலம் தொடர்பில் அவர்கள் மிகவும்கஷ்டப்படுகின்றனர். இராணுவம் ஒரு பக்கத்தால் வந்து நிலம் கோருகின்றது மறு பக்கம் மக்களின் காணிகளை பலர் அபகரிக்கும்சூழல் உள்ளது பிரதம வவுனியா வந்தபோது காணிக்கச்சேரி ஒன்றை நடத்த வேண்டுமென நாம் கேட்டிருந்தோம். காணிக்கச்சேரி பல வருடங்களாக நடத்தப்படாத நிலையுள்ளது.

அடக்குமுறை என்பது தொடர்ந்தும் இருக்குமாக இருந்தால், எங்களுடைய மக்கள் தொடர்ந்தும் நில அடக்குமுறை, கடல் அடக்குமுறை,நினைவேந்தல் அடக்குமுறை என தொடருமா இருந்தால் எமது மக்கள் கிளர்ந்தெழுவார்கள். எனவே அவ்வாறான சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டாமென கோருகின்றோம்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )