புதிய மின் கட்டணத்துக்கு எதிராக 29 ஆம் திகதி மக்கள் வீதியில் இறங்குவர்

புதிய மின் கட்டணத்துக்கு எதிராக 29 ஆம் திகதி மக்கள் வீதியில் இறங்குவர்

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மின்சார கட்டணத்திற்கு எதிராக எதிர்வரும் 29 ஆம் திகதி நாட்டு மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையில் முதல் போராட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அதன் பின்னர் நாடு முழுவதும் எதிர்ப்பு பேரணிகள் நடத்தப்படும் எனவும் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த மசோதாவை எதிர்க்காதவர்கள் யாராவது இருந்தால் அவர் குருடனாகவோ அல்லது ஊமையாகவோ இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை முன்னதாக வருடத்துக்கு இரண்டு முறை மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், இலங்கை மின்சார சபையின் நட்டத்தினை ஈடு செய்யும் வகையில் மூன்று முறை மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்தது.

இதனடிப்படையில் இவ்வருடத்தில் மூன்றாவது தடவையாக கடந்த மாதம் மின் கட்டணங்கள் 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது. இது மக்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியிருந்ததுடன் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் மின்வெட்டை எதிர்கொள்ளும் குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )