
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பமான மாவீரர் வாரம்
முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் 21 ஆம் திகதி உணர்வு பூர்வமாக ஆரம்பமானது.
விடுதலைப் போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் செலுத்தி மாவீரர்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டனர்
அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது
கார்த்திகை மாதம் 21 ம் திகதி முதல் 27 ம் திகதி வரை மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்படுவது வழமை அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டு பிரமாண்டமான நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.