ஜோர்தானில் 100 இலங்கையர்கள் தடுத்துவைப்பு!

ஜோர்தானில் 100 இலங்கையர்கள் தடுத்துவைப்பு!

மத்திய கிழக்கு நாடான ஜோர்தானில் சுமார் 100 இலங்கையர்கள் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த இலங்கையர்களின் விசா காலாவதியாகியுள்ள போதிலும் தொழிற்சாலையினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவர்களை நாட்டுக்கு அனுப்ப குறித்த தொழிற்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த தொழிற்சாலை நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்காமல் சேவைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதனால் அந்த இளைஞர்கள் மீண்டும் இலங்கைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )