பாடத்தை கவனிக்க மறந்த மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர் கைது

பாடத்தை கவனிக்க மறந்த மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர் கைது

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவ பிரதேசத்தின் பிரபல பாடசாலையொன்றில் தரம் 4ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை ஆசிரியை ஒருவர் தடியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 10.30 மணியளவில் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தரம் 4 இல் (06.11.2023) திங்கட்கிழமை ஆங்கில பாடம் இடம் பெற்றுக்கொண்டிருந்த வேலை அருகில் உள்ள மாணவருடன் தாக்கப்பட்ட மாணவனோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து குறித்த ஆசிரியர் மாணவளை தாக்கியதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவன், வலது கை மற்றும் உடம்பின் பின் பகுதியிலும் தாக்கப்பட்டுள்ளதாகவும் தாக்கப்பட்டமைக்கான சாட்சியங்கள் சிறுவனின் உடம்பின் பின் புறத்தில் காணப்படுவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவனின் தாக்குதல் சம்பவத்திற்கு பாடசாலையின் அதிபர் முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டுமென சிறுவனின் தந்தை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )