அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் செல்வாக்கு குறையவில்லை

அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் செல்வாக்கு குறையவில்லை

பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழுவின் பதவிக்காக வெரிட்டே ரிசர்ச் தலைவர் காத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்ட அவர், தனக்கு பதவி வழங்கப்படாததால் அந்த நிறுவனங்கள் தவறான கணக்கெடுப்பு அறிக்கையை சமர்ப்பிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபரும் அரசியலமைப்பு பேரவையின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக விரும்புவதாகவும், அதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி, ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு ஆதரவளித்து பல்வேறு விடயங்களை அறிவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் செல்வாக்கு குறைந்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் இது நம்பக்கூடிய விடயம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )