’மொட்டு இன்றி அரசாங்கம் மலராது’

’மொட்டு இன்றி அரசாங்கம் மலராது’

பொதுஜன பெரமுன இல்லாமல் தனியாக அரசாங்கமொன்றை உருவாக்கிவிட முடியும் என்று சிலர் கருதுவார்களாக இருந்தால் அது தவறான விடயமாகும். எங்களின் பங்களிப்பின்றி அரசாங்கமொன்றை உருவாக்க முடியாது என்று தெரிவித்த அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, பொதுஜன பெரமுனவின் தலைமையில் தனித்து ஆட்சி அமைக்க முடியாவிட்டால் பெரும் அதிகாரம் பொருந்திய எதிர்க் கட்சியாக செயற்படுவோம் தெரிவித்தார்.

களுத்துறை, பண்டாரகம, மில்லனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்‌ஷ வை ஆதரிக்கும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள். இருந்தபோதும் துரதிர்ஷ்டவசமாக கோட்டாபய ராஜபக்‌ஷ வை ஜனாதிபதியாக்கினோம். ஜனாதிபதியானதன் பின்னர் கோட்டா சேதன பசளைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், நாங்களும் அதனால் சிக்கலை சந்தித்தோம். இறுதியில் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற கோட்டாபய, ஒரு இலட்சம் பேரை கூட கொழும்புக்கு அழைத்துவர முடியாதவர்களுக்கு பயந்தார். அந்த பயத்தின் பிரதிபலனாகவே வீடுகளுக்கு தீர்வைக்கப்பட்டது.

கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன. ஆரம்பத்திலேயே அவர்களை அடக்கியிருந்தால் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்றார்.

இருந்தபோதும் மக்கள் விடுதலை முன்னணி தமக்கு இருக்கும் மக்கள் ஆதரவை காட்டி கூட்டங்களை நடத்தி வருகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் சரியான முறையில் சுவரொட்டிகளை மக்கள் விடுதலை முன்னணியே காட்சிப்படுத்தியது. ஆனால், தேர்தல் இறுதியில் 03 சதவீதமான வாக்குகளையே பெற்றுக்கொள்வார்கள்.

அடுத்த வருடம் நாங்கள் தனியான அரசாங்கமொன்றை உருவாக்கவே திட்டமிட்டுள்ளோம். அது சிறந்த அரசாங்கமாக இருக்கும். ஒருவேளை எங்களால் ஆட்சி அமைக்க முடியாவிட்டால் பெரும் பலம்பொருந்திய எதிர்க் கட்சியாக செயற்படுவோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )