முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இந்துபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் ஆலய காணி விடுவிப்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இந்துபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் ஆலய காணி விடுவிப்பு

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் 23.01.1989 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட செயற்பட்டு வந்த முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இந்துபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் காணியில் செவ்வாய்க்கிழமை (31) பொலிஸார் மற்றும் அதிகாரிகளின் பிரசன்னத்தில் ஆலய நிர்வாகம் மற்றும் பொது மக்களால் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் ஆலயக் காணியை ஆக்கிரமித்து இருந்த நிலையில் ஆலய நிர்வாகம் கடந்த பல ஆண்டுகளாக திணைக்களங்கள், பொலிஸ் நிலையங்கள் என ஏறி இறங்கி வந்த போதும் குறித்த நபர் தனக்கிருந்த செல்வாக்கு அடிப்படையில் ஆலயத்தின் காணியை ஆக்கிரமித்திருந்தது கைவிடவில்லை.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கின் நிமித்தம் நீதிமன்றம் வழங்கி ஆலோசனையின் பிரகாரம் குறித்த காணியை அதிகாரிகள் பொலிஸாரின் பிரசன்னத்துடன் இன்று வேலியிட்டு  குறித்த நபரின் பிடியிலிருந்து மீட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )