இஸ்ரேலில் விசா இன்றித் தங்கியுள்ள இலங்கையருக்கு விசா வழங்கப்படாது

இஸ்ரேலில் விசா இன்றித் தங்கியுள்ள இலங்கையருக்கு விசா வழங்கப்படாது

இஸ்ரேலில் விசா இல்லாமல் இருக்கும் இலங்கையர்களுக்கு விசா வழங்குவதை நான் அனுமதிக்கமாட்டேன். இலங்கையில் வாழமுடியாது எனத் தெரிவித்து இங்கிருந்து சென்று சட்டவிராேதமான முறையில் அந்த நாட்டில் இருந்தவர்களுக்கு விசா வழங்குவது சட்டவிராேதம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இஸ்ரேல்- ஹமாஸ் மோதலில் இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா வீரசிங்கவின்உடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா வீரசிங்கவுக்கு உரித்தான அனைத்து நஷ்டஈட்டு கொடுப்பனவுகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்ரேலில் பணி புரிந்துவரும் எமது தொழிலாளர்களுக்கு அங்கு இருப்பது ஆபத்து என்றால் எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நாங்கள் தயார். எனினும் அவ்வாறு நாட்டுக்கு அழைத்துக்கொள்ளுமாறு இதுவரை யாரும் எம்மிடம் கோரிக்கை விடுக்கவில்லை.

அதேவேளை யுத்தம் இடம்பெறும் பிரதேசங்களில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. என்றாலும் இஸ்ரேலில் மாத்திரம் அல்ல, அதற்கு அண்மித்த நாடுகளில் பணிபுரிந்துவரும் இலங்கையர்களுக்கும் யுத்தத்தினால் ஆபத்து நிலைமை இருப்பதாக இருந்தால், அவர்களை நாட்டுக்கு அழைத்துவர தயார்.

இஸ்ரேலில் விசா இல்லாமல் இருக்கும் இலங்கையர்களுக்கு விசா வழங்குவதை நான் அனுமதிக்கமாட்டேன். இவ்வாறு விசா வழங்குவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். இலங்கையில் வாழமுடியாது என தெரிவித்து இங்கிருந்து சென்று சட்டவிராேதமான முறையில் அந்த நாட்டில் இருந்தவர்களுக்கு விசா வழங்குவது சட்டவிராேதம்.சட்டவிராேதமான முறையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக நாங்கள் வழக்கு தாெடுத்திருக்கும் நிலையில் அந்நாட்டு தூதுவர் தலையிட்டு விசா பெற்றுக்கொடுப்பதை நான் அனுமதிக்க மாட்டேன் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )