சீனாவின் இராணுவத் தளபாட விநியோகத் தளமாக இலங்கை!; அமெரிக்காவின் பென்டகன் தெரிவிப்பு

சீனாவின் இராணுவத் தளபாட விநியோகத் தளமாக இலங்கை!; அமெரிக்காவின் பென்டகன் தெரிவிப்பு

இலங்கையை இராணுவ தளபாட விநியோகத்திற்காக பயன்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்துள்ளது என அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்துள்ளது.

சீனா தனது உலகளாவிய இராணுவ தளங்களை விஸ்தரிக்க முயற்கின்றது என தெரிவித்துள்ள பென்டகன் சீனா தனது இராணுவதளபாட விநியோகத்திற்காக 18 நாடுகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இராணுவநடவடிக்கைகளிற்கான தேவை எழும்போது சீனா இராணுவம் பயன்படுத்தக்கூடிய தளங்களை உருவாக்குவது குறித்தே சீனா கவனம் செலுத்துகின்றது.

சீனா இராணுவதளபாட விநியோகத்திற்கான தளங்களை ஏற்படுத்துவது குறித்து ஆராயும் நாடுகளில் நான்கு நாடுகள் இந்தியாவின் நெருங்கிய அயல்நாடுகளாகும் பங்களாதேஷ், இலங்கை,மியன்மார்,பாகிஸ்தான் ஆகிய நாடுகளே இவை என பென்டகன் தெரிவித்துள்ளது.

ஏனைய மூன்றுநாடுகளும் தென்கிழக்காசிய நாடுகள் தாய்லாந்து சிங்கப்பூர் இந்தோனேசியா என 2023 இல் சீனாவில் இராணுவம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற அமெரிக்காவின் காங்கிரஸிற்கான அமெரிக்காவின் பாதுகாப்பு வருடாந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

தொலை தூரங்களில் தனது இராணுவ வலிமையை வெளிப்படுத்துவதற்கு உதவும் விதத்தில் சீனா தனது வெளிநாட்டு உட்கட்டமைப்பு மற்றும் விநியோக வசதிகளை விஸ்தரிக்க முயல்கின்றது என தெரிவித்துள்ள பென்டகன் சீனாவின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் இராணுவநடவடிக்கைகளை குழப்பலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )