
ஆஸிக்குள் நுழைய கம்மன்பிலவுக்கு தடை
அவுஸ்திரேலியாவுக்குள் தான் நுழைவதற்கான விசாவை அந்த நாடு இடைநிறுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து வெளியிடுகையில்,
அந்த நாட்டுக்குள் நான் பிரவேசிப்பதற்கு பல வருடங்களாக அமெரிக்க அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சராக பதவி வகித்தபோது 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக விசா கோரிக்கையை சமர்ப்பித்த போது, தனக்கு விசா வழங்க மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது மனைவி மற்றும் பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்தாலும், அமெரிக்காவில் உள்ள இந்த விசா தடையின் அடிப்படையில், அவுஸ்திரேலியா தனது நாட்டிற்குள் நுழைவதற்கான விசாவை இடைநிறுத்தியுள்ளதாகவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.