
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிர் நீத்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல்
யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் திகதியன்று கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாணவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். பல்கலைகழக வளாகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.

Remembrance of Jaffna University student

CATEGORIES செய்திகள்