
“மலையகம் 200′ தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனம் வெளியிடப்பட்டது
மலையகம் 200 தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடன வெளியீடு ஹட்டன் டி.கே. டிபூயூ மண்டபத்தில் இடம் பெற்றது.
ஹட்டன் பிரகடன வெளியீட்டின் போது, கலைசார நிகழ்வுகளும் நுால் வெளியீட்டு விழாவும் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஷாநாயக்க சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இதேவேளை, பிரகடனத்தின் வெளியீட்டின் முதல் கையெழுத்தை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஷாநாயக்க, மற்றும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன், சட்டத்தரனிகள் எனபலரும் கையொப்பம் இட்டமை குறிப்பிடதக்கது.
இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சட்டத்தரனி லால் விஜேயநாயக்க, தேசிய
மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் விஜயகுமார்,பேரவையின் உறுப்பினர் சரோஜா போல்ராஜ், நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர்
மஞ்சுல சுரவீர, மற்றும் தோட்டதலைவர்கள் என பெருந்திரலான மக்கள் கலந்து கொண்டனர்.