
நாட்டின் அடுத்த தலைவராக நாமல்
நாமல் ராஜபக்ஷ இந்நாட்டின் தலைவராவதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையெனவும் உலக நாடுகளில் பெரும்பாலானோர் இளம் தலைவர்களாகவே இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ருமேனிய கிளையின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், நாமல் ராஜபக்சவுக்கு மக்களின் விருப்பமும் கட்சியின் விருப்பமும் உள்ளது என்றும் அவர் நாட்டின் தலைமைப் பதவிக்கு வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
இன்று உலகில் பெரும்பான்மையானவர்கள் இளம் தலைவர்கள் என்றும் அதனால் கட்சித் தலைவராகும் தகுதி நாமல் ராஜபக்சவுக்கும் உண்டு என்றும் மகிந்த ராஜபக்ச பதிலளித்தார்.
நாமல் எனது மகன். ஒரு தந்தை தன் பிள்ளைகளை எப்போதும் சிறியவர்களாகவே பார்க்கிறார். கட்சியைப் போலவே மக்களின் விருப்பமும் நாமலுக்கு இருந்தால், அவர் நாட்டின் தலைமைக்கு வருவதில் எனக்கு ஆட்சேபனை இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.