கொழும்பில் 7 முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமா ?; அதி உச்ச பாதுகாப்பு வேண்டும் -எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

கொழும்பில் 7 முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமா ?; அதி உச்ச பாதுகாப்பு வேண்டும் -எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

கொழும்பில் 7 முக்கிய இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் குண்டுத்தாக்குதல் நடத்தப்போவதாக வெளியாகியுள்ள

தகவலின் உண்மைத்தன்மையை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இவ்வாறான பயங்கரவாதத்தை அடக்குவதற்காக சட்ட ரீதியில் எடுக்க கூடிய அதி உச்ச நடவடிக்கையை அரசு முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு கோரிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் பேசுகையில்,

கொழும்பில் 7 முக்கிய இடங்களுக்கு ஐ.எஸ். குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல் என சிங்கள தேசிய பத்திரிகை ஒன்றில் அறிக்கையிடப்பட்டிருக்கிறது.இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் திட்டமிடப்பட்டிருப்பதாகவே குறித்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது மிகவும் பாரதூரமான விடயம். எனவே இதன் உண்மைத் தன்மை தொடர்பாக ஆராய்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் 30 வருட பயங்கரவாத யுத்தம், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நாடு. அதனால் கடந்தகால சம்பவங்களை பாடமாகக் கொண்டு செயற்பட வேண்டும். இந்த பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பாக பயங்கரவாத விசாரணை பிரிவை அடிப்படையாகக்கொண்டு மிகவும் முறையான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக பாராளுமன்றத்துக்கு அரசு அறிவிப்பொன்றை விடுக்க வேண்டும்.

அத்துடன் இந்த பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பான தகவலின் உண்மைத் தன்மை தொடர்பாக மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் அதனால் இந்த விடயங்களை வெளிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரம் பயங்கரவாதத்தை அடக்குவதற்காக சட்ட ரீதியில் எடுக்க கூடிய உச்ச நடவடிக்கைகயை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )