இரண்டு வாரங்களுக்கு முடங்கப்போகும் நீதித்துறை

இரண்டு வாரங்களுக்கு முடங்கப்போகும் நீதித்துறை

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர்சியாக இரு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்துள்ளனர். இதன் போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி சட்டவாட்சியை நிலைநாட்டவும் ஏதுவாக எதிர்வரும் இரு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என தீர்மானித்துள்ளனர்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு,

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தால் எடுக்கப்பட்ட பணிப்பகிஸ்கரிப்பில் நாளைய தினம் இணைவதுடன் யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் முல்லைத்தீவு சென்று நீதிமன்றத்தின் முன்னால் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது

நீ துறைக்கு ஏற்பட்ட இந்த அச்சுதலை கண்டித்து அடுத்து வரும் இரண்டு வாரங்கள் கறுப்பு நிறத்திலான முக்க்கவசங்களை அணிந்து கடமையில் ஈடுபடுவது

தமிழ் கட்சிகளினால் மருதனார்மடம் முதல் யாழ்ப்பாணம் வரை குறித்த நீதிபதிக்கு எதிரான அச்சுறுத்தல்களைக் கண்டித்து 4ஆம் திகதி நடத்த இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவை தருவதுடன் அதில் அனைத்து சட்டத்தரணிகளும் பங்கு கொள்வது

நாளையும் நாளை மறுதினமும் சட்டத்தரணிகள் வடமாகாண நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பதுடன் இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கை தொடர்பான விசேட பொதுக்கூட்டத்தினை எதிர்வரும் 4ஆம் திகதி நடாத்துதல்.

கௌரவ நீதிபதிக்கு ஏற்பட்ட அச்சுறுத்த தொடர்பில் பாரபட்சமற்ற உருய சுயாதீன விசாரணை செய்யப்பட வேண்டும்.

எச்சந்தர்ப்பத்துலும் நீதித்துறை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். போன்ற முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )