
”கொலையாளி”என்று கூறியதால் அமைதியான பிள்ளையான்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனது பெயர் கூறப்படுவதற்கு இராஜாங்க அமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான் ) எதிர்ப்புத் தெரிவிக்க முயன்ற நிலையில் அவரை ”கொலையாளி” என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் க்கூறி குற்றச்சாட்டுக்களை அடுக்கவே பிள்ளையான் அமைதியடைந்து விட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான முதல்நாள் விவாதத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. நிரோஷான் பெரேரா பிரேரணையாயி முன்வைத்த உரையாற்றியபோது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் இராஜாங்க அமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையானுக்கு) உள்ள தொடர்புகள் குறித்தது பேசினார்.
இதனையடுத்த்து ஒழுங்குப்பிரச்சினைஎழுப்பிய இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்),
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் சம்பவம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய நிரோஷன் பெரேரா எம்.பி.எனது பெயரை குறிப்பிட்டு ஒருசில விடயங்களை குறிப்பிட்டார்.
குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டால் அதற்கும் தயாராக உள்ளேன்.எப்போது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வீர்கள் என்று குறிப்பிடுங்கள் .குண்டுத்தாக்குதல் இடம்பெற்று முடிந்த பின்னர் எதிர்க்கட்சிகளின் செயற்பாடு சிறுபிள்ளைத்தனமாகவுள்ளது என்றார்.
இதற்கு பதிலளித்த நிரோஷன் பெரேரா எம்.பி. சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு இந்த குண்டுத்தாக்குல் சிறுப்பிள்ளைத்தனமானதாக இருக்கலாம்.ஆனால் உயிரிழந்த,பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இச்சம்பவம் சிறுப்பிள்ளைத்தனமானதல்ல, இவரின் வரலாற்றை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் .பிள்ளையானுக்கு எதிராக வெகுவிரைவில் முறையான விசாரணைகளை முன்னெடுப்போம் என்றார்.
இதனையடுத்து எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான நளின் பண்டார, தலதா மாளிகைக்கு குண்டுத்தாக்குதலை நடத்தியவர்,ஜோசப் பரராசசிங்கத்தை படுகொலை செய்தவர்,திரிபோலி கொலைக் குழுவுக்கு தலைமை தாங்குவர் எமக்கு இடையூறு விளைவிக்கிறார்.இவ்வாறானவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளாமை அரசின் தவறு.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்த விவகாரத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பிள்ளையான் சிறையில் இருந்தார்.அக்காலப்பகுதியில் சிறைக்கு சென்ற சஹ்ரான் தரப்பினருக்கும்,பிள்ளையானுக்கும் இடையில் தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. 52 நாள் அரசியல் நெருக்கடி நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிக்கப்பட்டவுடன்,”பிளான் பி” சிறைக்கூடத்தில் வகுக்கப்பட்டது.ஆகவே பிள்ளையானை முறையாக விசாரித்தால் பல இரகசியங்கள் வெளிவரும் என்றார்.
இதற்கு பின்னர் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அமைதியாக அமர்ந்திருந்தார்.

