கஜேந்திரகுமார் – கஜேந்திரன் ஜெனிவா பயண; திருமலை சம்பவம் குறித்தும் முறைப்பாடு

கஜேந்திரகுமார் – கஜேந்திரன் ஜெனிவா பயண; திருமலை சம்பவம் குறித்தும் முறைப்பாடு

இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர் மட்டப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்காகவும் எதிர்வரும் 24 ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் ஜெனிவா செல்லவுள்ளனர்.

அங்கு இடம்பெறவுள்ள சந்திப்புக்கள் குறித்து இன்னமும் உறுதியாகத் தீர்மானிக்கப்படாத போதிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகள்,
இணை அனுசரணை நாடுகள் மற்றும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்புக்களை நடாத்துவதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதேவேளை திருகோணமலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் முறையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )