தியாக தீபம் திலீபன் சாகவில்லை அவர் கொலை செய்யப்பட்டார்; வணபிதா மா. சத்திவேல்

தியாக தீபம் திலீபன் சாகவில்லை அவர் கொலை செய்யப்பட்டார்; வணபிதா மா. சத்திவேல்

தியாக தீபம் திலீபன் சாகவில்லை அவர் கொலை செய்யப்பட்டார் இந்தியாவின் அகிம்சையும் இலங்கை தேசத்தின் சிங்கள பௌத்தமும் அவரை கொலை செய்துள்ளது என மனித உரிமை செயற்பாட்டாளரான வணபிதா மா. சத்திவேல் தெரிவித்தார்.

குற்றவாளிகள் சர்வதேச குற்றியல் நீதிமன்றத்தின் கூண்டின் முன் நிறுத்தி தண்டிக்கப்படும் வரையும் திலீபன் சாட்சியாக நாங்கள் போராடுவோம் எமது போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலையிட்டு பொத்துவில் இருந்து யாழ் நோக்கிய தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” தியாகி திலீபனுடைய 36 வது நினைவு நாளில் சுடர் ஏற்றுகின்றோம் இந்த சுடர் தாயகத்தின் அரசியல் இலட்சியத்தின் சுடர் அன்று திலீபன் என கோரிக்கைகளை முன்வைத்தாரே அந்த கேரிக்கைகளை இன்றும் நாம் அதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

அந்த போராட்டம் வெற்றி பெறும் வரையில் பயணத்தை தொடருவோம்.

எங்களை ஏமாற்றுகின்ற ஆட்சியாளர்கள் தொடர்ந்து எங்களை ஏமாற்றுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர் தியாகி திலீபன் சாகவில்லை அவர் கொலை செய்யப்பட்டார் .

இந்தியாவின் அகிம்சையும் இலங்கை தேசத்தின் சிங்கள பௌத்தமும் அவரை கொலை செய்துள்ளது சிங்கள பௌத்தம் கொலை செய்யும் அழிக்கும் என்பதற்கு அடையாளமாகத்தான் தியாகி திலீபன் இருக்கின்றார்.

இந்த நாடு அழிவுகளுக்கு மத்தியிலே தான் இவர்கள் மகிழ்சியை காண்கின்றனர்கள் தங்களுடைய இனத்தையே அழிப்பவர்கள் 2019 உயித்த ஞாயிறு குண்டுவெடிப்பு தெற்கிலே பாரிய வெடிப்பாக வெளிப்பட்டுள்ளது இந்த வெடிப்பிற்கு காரணமாணவர்கள் மகிந்த கோட்டாபய மட்டுமல்ல இந்தியாவும் பதில் சொல்ல வேண்டும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )