நாமல் சிங்கமா?

நாமல் சிங்கமா?

அப்பா மைனாவாகவும், சித்தப்பா காக்காவாகவும் இருக்கும் போது நாமல் ராஜபக்‌ஷவினால் சிங்கமாக இருக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர்

மேலும் கூறுகையில்,

நாமல் ராஜபக்‌ஷ தன்னை சிங்கமாகவே நினைக்கிறார். பைத்திய குட்டியாராச்சிகள் இப்படி கூறுகின்றனர். அப்பா மைனாவாக, சித்தப்பா காக்காவாக இருக்கையில் அவரால் சிங்கமாக முடியாது. அவர் நரியாவோ, கிளியாகவோ இருக்க வேண்டும். அடுத்த பொதுத் தேர்தலில் உங்களின் அப்பாவுக்கு போட்டியிட முடியாது. இறுதியில் மொட்டில் இருப்பவர்களே ஒன்றிணைந்து உங்களை மொட்டுவார்கள் என்பதனை கூறிக்கொள்கின்றோம். அந்த மொட்டுகளில் இருந்து தப்பிக்கும் வழியை தேடுங்கள் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )