தியாக தீபம் தீலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு வாரம் நல்லூரில் ஆரம்பம்

தியாக தீபம் தீலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு வாரம் நல்லூரில் ஆரம்பம்

தமிழ் மக்களின் விடிவுக்காக உண்ணா நோன்பிருந்து, தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு வாரம் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.

தமிழர் தேசமெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலானது நள்ளிரவு 12 மணியளவில், நல்லூருக்கு அருகாமையில் உள்ள தியாக தீபத்தின் நினைவேந்தல் தூபியடியில் நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்திப் பவணியும் இதன்போது ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )