
திலித் ஜயவீரவுடன் இணைந்து மீண்டும் அரசியலுக்கு வரும் கோட்டாபய
மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி விலகிய பின்னர் மௌனமாக இருந்து வரும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நேற்று தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த திலித் ஜயவீரவின் மௌபிம ஜனதா கட்சியின் ஊடாக மீண்டும் அரசியலுக்கு வர தயாராகி வருவதாக கொழும்பில் வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
திலித் ஜயவீர மௌபிம ஜனதா கட்சியை விலைக்கு வாங்கி, கட்சியை பெறுப்பேற்ற பின்னர், கட்சியின் யாப்பில் மாறங்கள் செய்து, புதிய நிர்வாகிகளை தெரிவு செய்ததும் புதிய அங்கத்தினர்களை சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கோட்டாபய ராஜபக்ச முன்னெடுத்த வியத்மக போன்று படித்த, புத்திஜீவிகளையும் கட்சியில் இணைக்கும் நடவடிக்கைகளையும் திலித் ஜயவீர ஆரம்பித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் திலித் ஜயவீரவின் மௌபிம ஜனதா கட்சிக்கு கோட்டாபய தனது ஆசியையும் முழு ஆதரவையும் வழங்குவார் என கூறப்படுகிறது.
திலித் ஜயவீரவின் நோக்கம் என்ற அமைப்பு அடுத்து நடக்க உள்ள தேர்தல்களில் மௌபிம ஜனதாக கட்சியாக போட்டியிடும் என அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மௌபி ஜனதா கட்சி எதிர்வஐம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எனவும் அவரை் கூறியுள்ளார்.

