பிரித்தானியாவின் சனல் 4 செய்திகளில் உண்மையில்லை ; பிள்ளையான் கண்டனம்

பிரித்தானியாவின் சனல் 4 செய்திகளில் உண்மையில்லை ; பிள்ளையான் கண்டனம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சணல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில்தனது கண்டனங்களை வெளியிடுவதாக பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கன்சீர் அசாத் மௌலானா என்பவர் தனது தனிப்பட்ட அரசியல் புகலிடக்கோரிக்கைக்காக உண்மைக்கு புறம்பான முறையில் அளித்த வாக்குமூலத்தையும்,அதனையொட்டியதாக சணல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தால் சித்தரித்து வெளியிடப்பட்ட காணொளியையும் நானும் பார்த்திருந்தேன்.

உண்மையிலேயே ஐரோப்பாவில் இயங்கி வரும் இவ்வாறான ஒரு ஊடகம் உண்மையை சரிவர ஆராயாமல் மக்களை குழப்பி திசைதிருப்பும் வண்ணமாக உண்மைக்கு புறம்பான இச்செய்திகளை வெளியிட்டிருப்பது மனதிற்கு மிகவும் கவலையளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )