“இந்தியாவுடனான நில இணைப்பு“ – இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் – மிலிந்த மொரகொட

“இந்தியாவுடனான நில இணைப்பு“ – இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் – மிலிந்த மொரகொட

இலங்கை – இந்திய நில இணைப்பு மற்றும் வலுவான பொருளாதார உறவுகளை கட்டியெழுப்புவதன் மூலமு் இலங்கை பொருளாதார ஸ்திரமடைய முடியுமென இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.

மையத்தின் தூதுவர் தொடரின் கீழ், புதுடெல்லி அனந்தா மையத்தில், “இந்தியா-இலங்கை உறவுகள் : இணைப்பை ஊக்குவித்தல், செழிப்பை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற விரிவுரை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய-இலங்கை உறவின் கடந்த கால மற்றும் நிகழ்கால இயக்கவியலின் தனித்துவமான பண்புகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகளை வரையறுக்கும் பரந்த கருத்துகளை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, தமது விரிவுரையில் முன்வைத்தார்.

இந்திய – இலங்கை உறவானது கடந்தசில ஆண்டுகளில் மிகவும் வலுவாகியுள்ளது. இது இருநாட்டு பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.

‘இந்தியா-இலங்கை பொருளாதார கூட்டு நோக்கு’ ஆவணத்தில் வரைபடமாக்கப்பட்டுள்ள ஐந்து முக்கிய அம்சங்களை இயக்குவதன் முக்கியத்துவம் மற்றும் அவை தற்போதுள்ள உறவை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என்பதையும் மிலிந்த மொரகொட வலியுறுத்தினார்.

இந்தியப் பெருங்கடலின் பிராந்திய இயக்கவியல் மற்றும் முன்னேற்றங்கள் குறித்துப் பேசிய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய பெருங்கடல் மற்றும் பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகள் குறித்து இலங்கை முழுமையாக அறிந்திருப்பதாகக் கூறியதுடன், இந்தியாவில் உருவாகி வரும் சூழ்நிலைகள் குறித்து இலங்கை அதிக கவனம் செலுத்துகிறது என்றும் விளக்கினார்.

அனந்தா மையம் என்பது ஒரு கட்சி சார்பற்ற, இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது தலைமைத்துவ மேம்பாடு மற்றும் இந்திய சமூகம் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் திறந்த உரையாடல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )