13ஐ அமுல்படுத்த ஒத்துழைப்பு தேவை; விக்கியுடன் மீண்டும் தொடர்பு கொண்ட ரணில்

13ஐ அமுல்படுத்த ஒத்துழைப்பு தேவை; விக்கியுடன் மீண்டும் தொடர்பு கொண்ட ரணில்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அமுலாக்கம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுடன் மீண்டும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.இந்தக் கலந்துரையாடலின்போது 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் அமுலாக்கம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளை தான் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல தமிழ் கட்சிகளின் முழுமையான ஒத்துழைப்பு தேவை என்பதனை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அது தொடர்பிலான சில விடயங்களையும் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது தமது ஆதரவை உறுதிப்படுத்திய விக்னேஸ்வரன் ஜனாதிபதியை நேரில் சந்தித்தது பேச வேண்டியதன் அவசியம் குறித்தது கூறிய நிலையில் ஒரு சில தினங்களுக்குள் அதற்கான அழைப்பை விடுப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதுதொடர்பில் 15-08-2023 ஆம் திகதிக்கு முன்னதாக பாராளுமன்றத்தைபிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் பெற்றுத்தருமாறு

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கட்சிகள் மற்றும் குழுக்களின்தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ளார். ஏற்கனவே பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் விக்னேஸ்வரன் ஜனாதிபயிடன் நேரில் கையளித்துள்ள நிலையிலேயே நேற்று மீண்டும் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )