கிழக்கு அபிவிருத்தி குறித்து சம்பந்தனுடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்

கிழக்கு அபிவிருத்தி குறித்து சம்பந்தனுடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் விசேட கலந்துரையாடிலொன்று இடம்பெற்றது.

கூட்டமைப்பின் தலைவர் இரா்.சம்பந்தனின் இல்லத்தில் இந்தச்சந்திப்பு இடம்பெற்றதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பில், கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் குறித்து இரா.சம்பந்தனுக்கு ஆளுநர் விளக்கமளித்ததுடன், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் தெளிவுப்படுத்தினார்.

இதேவேளை, சமகால அரசியல் விடயங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுடன், இ.தொ.கா மற்றும் கூட்டமைப்புக்கு இடையிலான நட்புறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் அவதானம் செலுத்தினர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )