
‘பிரபல சாக்லேட் வர்த்தக நாமத்தில் மறைந்திருந்த கட்டைவிரல்’
மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் ஊழியர் ஒருவரினால் வைத்தியசாலையின் உணவு விடுதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரபல வர்த்தக நாமமான ‘கெண்டோஸ்’ சொக்லேட் ஒன்றினுள் மனித உடலிலிருந்து பிரிக்கப்பட்ட பெருவிரலின் ஒரு பகுதி நேற்று (05) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் மஹியங்கனை வைத்தியசாலைக்கு தொலைபேசி மூலம் அழைப்பினை மேற்கொண்டபோது, பொது சுகாதார பரிசோதகரின் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
குறித்த சாக்லேட்டினை கொள்வனவு செய்த சிற்றூண்டிச்சாலையை சோதனைக்குட்படுத்திய பரிசோதகர்கள் அதே வர்க்கநாமத்தை சேர்ந்த அனைத்து சாக்லேட்டுக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த மூன்று நாட்களுக்கு முன் வைத்தியசாலை ஊழியர் வாங்கிய சாக்லேட்டில் ஒரு பகுதியை சாப்பிட்டு, மீதமுள்ள பகுதியை குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார்.
ஆனால், நேற்று அதை சாப்பிட முற்பட்டபோது, அது திடமாக இல்லை, ஆனால் சாக்லேட் றப்பர் போல் இருந்துள்ளது.
அந்த சாக்லேட்டின் பகுதி “ப்ரூட் அண்ட் நட்” வகையைச் சேர்ந்ததால் நட்ஸ்சாக இருக்கலாம் என்று நினைத்து, அவரை கடுமையாக கடித்து, இழுத்தள்ளார்.
ஆனாலும், அதை கடிக்கமுடியவில்லை. துண்டுகளாக இல்லாத பகுதியை எடுத்து, தண்ணீர் குழாயில் பிடித்து கழுவியுள்ளார். அது மனித விரல் என்பதை பார்த்து சத்தமாக கத்தியுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு, உறவினர்கள் வந்து, சம்பவம் குறித்து விசாரித்து, வைத்தியசாலை மருத்துவ கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின் சம்பவத்துடன் தொடர்புடைய சாக்லேட் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர், நாளை (07 திங்கட்கிழமை) மஹியங்கனை நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்ததன் பின்னர் அனுப்பப்படுவார் எனவும் தெரிவித்தனர்.




