யாழ்ப்பாண சைவ உணவை ருசித்து உண்ட மைத்திரி

யாழ்ப்பாண சைவ உணவை ருசித்து உண்ட மைத்திரி

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மலையான் கபே சைவ உணவகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சைவ உணவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனா ருசித்து உண்டார்.

மூன்று நாள் விஜயமாக யாழ்ப்பாணம் வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.

அந்த வகையில் நேற்றைய தினம் சந்திப்புகளை முடித்துக் கொண்டு மதிய உணவுக்காக யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற சைவ உணவகமான குறித்த உணவகத்தில் மதிய நேர உணவை உண்பதற்காக வருகை தந்தார்.

உணவு உன்பதற்காக வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குழுவினருக்கு யாழ்ப்பாணத்திற்கு உரித்தான கருணைக்கிழங்கு பிரட்டல் கறியுடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

குறித்த உணவகத்தில் உணவு உண்பதற்காக வருகை தந்தவர்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடியதுடன் முன்னாள் ஜனாதிபதியுடன் உணவகத்தில் நின்றவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சயின் வாஸ் குணவர்தன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த சமீர, முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் தகாம் சிறிசேனா, அங்கஜன் இராமநாதனின் பிரத்தியோகச் செயலாளர் சிவராம் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.75

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )