யாழ்ப்பாணத்தில் காட்டிக் கொடுக்கும் பொலிசார்

யாழ்ப்பாணத்தில் காட்டிக் கொடுக்கும் பொலிசார்

யாழில் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரங்களை பொலிசாருக்கு வழங்கும்போது,அந்த விபரங்களை வழங்கிய கிராம சேவையாளர்களின் பெயர்களை, அந்தச் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு பொலிசார் வழங்குவதாக கிராம  அலுவலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற யாழ் மாவட்ட கிராம அலுவலர்களுக்கும் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு இடையிலான சந்திப்பின் போதே இதனைத்   தெரிவித்தனர்.

இங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில் கிராமத்தில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களின் பெயர்களை கிராம சேவையாளர்கள் பொலிசாருக்கு வழங்குகின்றனர்.

வழங்கும்போது  தகவல் வழங்கும் கிராம சேவையாளரின் பெயரை, சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள்  சில மணித்தியாலங்களுக்குள்  பொலிசார் ஊடாக அறிந்து கொள்கிறார்கள்.

யாழ் மாவட்டத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் தொடர்கிறது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் அதனுடன் தொடர்புடைய கிராம மட்டத்தில் இருக்கும் நபர்களின் பெயர் விவரங்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு வழங்குகிறோம்.

தகவலை வழங்கிய பின்னர் சில மணித்தியாலங்களில் எந்தக் கிராம   சேவையாளர் யாருடைய பெயரைக் கொடுத்தார் என்ற விவரம் சந்தேக நபர்களிடம் செல்கிறது.

இந்தத் தகவல்களை கிராம சேவையாளர்கள் பொலிசாருக்கு வழங்கும் போது அதனை பொலிஸார் சந்தேக நபர்களுக்கு இவர்தான் கூறினார் என தெரிவிக்கிறார்கள்.

இதனால் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களால் கிராம  சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நிலை உருவாகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தகவல் வழங்கும் கிராம சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் எனக்கு விபரங்களை அனுப்புங்கள் அல்லது உங்கள் பிரதேச செயலாளர் ஊடாக அரசாங்க அதிபருக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )