பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்டால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்டால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கினால் தேசியப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன என்பவர் பாதுகாப்பு அமைச்சிடம் கோரியிருந்தார்.இதற்கு பாதுகாப்பு வழங்கிய பதிலிலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் எனத்தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன என்பவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, மரபணு பரிசோதனை அறிக்கை, உயிரிழந்தது பிரபாகரன் என உறுதி செய்வதற்கு யாரிடமிருந்து மரபணு மாதிரிகள் பெறப்பட்டன? என்பது தொடர்பான தகவல்களை வழங்கக்கோரி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விண்ணப்பம் செய்திருந்தார்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகத்துக்கு தான் இந்த விண்ணப்பித்தை அனுப்பி வைத்திருந்ததாகவும்

‘தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்தத் தகவல்களை வழங்கினால் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்’ என்று குறிப்பிட்டு இலங்கை இராணுவமும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சும் பதிலளித்துள்ளதாகவும் இலங்கை தகவலறியும் ஆணைக்குழுவுக்கு இது குறித்து தான் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் ஊடகவியலாளர் மிதுன் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )