பதவி ஆசையால் பிளவடைந்த ரணில்- ‘மொட்டு’ அரசு!; ஜே.வி.பி. சுட்டிக்காட்டு

பதவி ஆசையால் பிளவடைந்த ரணில்- ‘மொட்டு’ அரசு!; ஜே.வி.பி. சுட்டிக்காட்டு

“ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவி மீது ஆசை; மொட்டுக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவி மீது ஆசை. இப்படிப் பதவி ஆசை பிடித்தவர்களின் ஆட்சி தற்போது பிளவடைந்துள்ளது” – என்று ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மக்கள் ஆணையை இழந்த ரணில் – மொட்டு அரசு, பதவி ஆசையில்தான் ஆட்சியில் அமர்ந்தது. இது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இவர்கள் எம்.பியாகப் பதவி வகிக்கக்கூடத் தகுதியற்றவர்கள். எனவே, புதிய மக்கள் ஆணை வேண்டும்; புதிய அரசு வேண்டும்.

எனவே, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மொட்டுக் கட்சியினரை விரட்டியடிக்க மக்கள் தயாராகவுள்ளனர்.” – என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )