ஆட்சியை தொடர ரணிலுக்கு உதவோம்

ஆட்சியை தொடர ரணிலுக்கு உதவோம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாரில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவித்துள்ளதாக இணையத்தளங்களில் வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது மக்களுடன் இணைந்து அரசியல் செய்யும் கட்சியாகும். மக்களிடம் சென்று தேர்தல் மூலம் அவர்களின் ஆணையூடாக அரசாங்கத்தை அமைப்போமே தவிர வேறு வழியில் ஆட்சியமைக்கப் போவதில்லை என்று ரஞ்சித் மத்துமபண்டார கூறியுள்ளார்.

இதனால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )