இலங்கை அழியப்போகின்றது; சபையில் சாணக்கியன் சூளுரை..!

இலங்கை அழியப்போகின்றது; சபையில் சாணக்கியன் சூளுரை..!

ஊடகங்களை அடக்கிக் சட்டங்களை அரசாங்கம் கொண்டுவருவதன் மூலம் இந்த நாடு அழியப்போகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற ஊழல்களை வெளிகொண்டு வந்தது ஊடகங்கள் மட்டுமே.

இந்நிலையில் இந்த ஊடகங்களை அடக்கும் வகையில் ஊடக சட்ட மூலம் ஒன்றை கொண்டு வந்து ஊடக சுதந்திரத்தை அடக்குவதால் இந்த நாட்டுக்கு அழிவுகாலம் நெருங்கிவிடும்.

நாட்டில் இடம்பெற்ற உரப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் பிரச்சினை பற்றிய சகல விடயங்களையும் வெளிகொண்டு வந்தது ஊடங்கள் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள் இந்த நாடு அழிவு பாதையில் செல்வதை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )