
கஜேந்திரகுமாருக்கு எதிராக முறைப்பாடு; ‘சிங்கள ராவய’ சபாநாயகருக்கு கடிதம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ‘சிங்கள ராவய’ வினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை காலை வந்த அக்மீமன தயாரட்ன தேரர் தலைமையிலான ‘சிங்கள ராவய’ அமைப்பினர் இக்கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தவிடம் கையளிக்க முயன்றபோதும் சபாநாயகருக்கு பதிலாக பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
பாராளுமனர் உறுப்பினர் என்ற அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி குழப்பங்களை விளைவிப்பதனால் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அக்கடிதத்தில் சிங்கள ராவயவினர் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

