
நாடா? நடாஷாவா?
நாட்டின் சுகாதாரத் துறையில் பாரிய பிரச்சினைகள் இருக்கும் நிலையில் நடாஷா தொடர்பில் விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் டெங்கு தொற்று அதிகரித்து வருகின்றது. இவை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தேசிய வைத்தியசாலையில் உள்ள வடிகுழாய் ஆய்வு கூடம் மூன்று மாதங்களாக மூடப்பட்டுள்ளது. சிறுவர் நல வைத்தியசாலையில் சிறுநீரக செயல்பாடு அளவிடும் இயந்திரம் பழுதடைந்து 6 மாதங்களாகிறது.
கண்டி புற்றுநோய் பிரிவில் உள்ள இரண்டு நேரியல் முடுக்கி இயந்திரங்களும் இயங்கவில்லை. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் 70 வகையான அத்தியாவசியப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 6 மருத்துவமனைகளில் பல மாதங்களாக சிடி ஸ்கேன் இயந்திரங்கள் இயங்கவில்லை. நாட்டில் 200 மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்ற நிலையில் அவற்றை மறந்து விட்டு நகைச்சுவை நடிகை நடாஷாவை பற்றி பேசிக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

