
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்திரி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்டஈடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கை கிடப்பில் போடுவதை சவாலுக்கு உற்படுத்தி தனது வழக்கையும் கிடப்பில் போடுமாறு முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீர்கொழும்பு சிவில் மேல்முறையீட்டு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு நிராகரிக்கப்பட்டது.
நீர்கொழும்பு சிவில் மேல்முறையீட்டு மேல் நீதிமன்றின் நீதிபதிகளான நிஸான்த ஹபுஆரச்சி, ரஷ்மி சிங்கப்புலி ஆகியோர் தமது தீர்ப்பில் 2022 டிசம்பர் 15ஆம் திகதி நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிபதி நுவன் தாரக்க ஹீனடிகல வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்ந்தும் உறுதிப்படுத்தப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் 182 பேர் நஷ்டஈடு கோரி நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தொடுத்த வழக்கில் ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவும் 2ஆவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார். அவர் நிரைவேற்று ஜனாதிபதியாக பதவி ஏற்றதினால் ஜனாதிபதி என்ற முறையில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணையை மாத்திரம் ஜனாதிபதியாக இருக்கு காலஎல்லையில் கிடப்பில் போடுமாறு நீர்கொழும்பு மாவட்ட மேலதிக நீதிபதி கடந்த டிசம்பர் 15ஆம் திகதி தீர்ப்பு வழங்கியிருந்தார்.
விக்ரமசிங்கவின் வழக்கை கிடப்பில் போடுவதாக இருந்தால் தமது வழக்குகளையும் கிடப்பில் போடுமாறு சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது மைத்திரிபால சிறிசேன, ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித்த ஜயசுந்தர ஆகியோரின் கோரிக்கைகளை செவ்வாய்க்கிழமை நீதவான் நிராகரித்தார்.

