
ரணில் விக்ரமசிங்க படைக்கும் கடவுள் அல்ல
ஜெரோம் பெர்னாண்டோவை ராஜபக்சவினரே கொண்டு வந்து முன்னிலையில் நிறுத்தியதாகவும் வெறுமனே அவர்கள் அப்படி செய்யவில்லை எனவும் அதில் அரசியல் சூழ்ச்சி இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டான தொகுதியின் அமைப்பாளர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜெரோம் பெர்னாண்டோவை ராஜபக்சவினரே கொண்டு வந்தனர். அவரை வெறுமனே ராஜபக்சவினர் முன்நோக்கி கொண்டு வரவில்லை.
அதில் அரசியல் சூழ்ச்சி இருக்கின்றது. தற்போது ராஜபக்சவினருக்கு மயிர் கூச்செறியும் வகையில் மதத்தை பற்றி பேச முடியாது.
மத, இன பேதங்களை தூண்டுவது இதுதான் அரசியல் சூழ்ச்சி. இந்தியாவை முன்னிலைப்படுத்தியது பௌத்த மத்திற்கு அவதிப்பை ஏற்படுத்துவதற்காக மட்டுமல்ல.
தற்போது மறைந்திருந்தவர்கள் வெளியில் வருவார்கள். கலபொட அத்தே ஞானசார தேரர் போன்ற பிக்குமார், இவர்களை கைது செய்யுமாறு கூறி மத உணர்வை தூண்டுவார்கள்.
இப்படி சென்றால், எம்மை நாகரீகப்படுத்த இந்தியாவில் இருந்து வேறு எவராவது வர வேண்டும்.
சாப்பிட உணவு இல்லாமல் இருக்கும் மக்களுக்கு, இன,மதங்களில் பயனில்லை.
மோசடி அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் ஆட்சியை கைப்பற்ற பயன்படுத்தியதை போல் தற்போதும் செய்கின்றனர்.
ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்கள். அவரை விமானத்தில் ஏற்றியுள்ளனர்.
18 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறக்கின்றது. தற்போது எந்த பதற்றமும் இன்றி பயணிக்கின்றார்.
எனினும் அவரது காலம் முடியும் போது விமானத்தில் இருந்து பரசூட்டிலேயே குதிக்க வேண்டும். எவருக்கும் விமானத்தில் ஏறவும் முடியாது இறங்கவும் முடியாது.
ரணில் விக்ரமசிங்க நாடு இருந்த நிலைமையில் இருந்து ஓரளவுக்கு நல்ல இடத்திற்கு கொண்டு வந்துள்ளதையிட்டு அவருக்கு நன்றி கூற வேண்டும்.
எனினும் அவருக்கும் ராஜபக்சவினருக்கு நற்சான்றை வழங்க அது ஒரு காரணி அல்ல.
டொலர்களை உழைக்க நடைமுறைகள் எதுவுமில்லை. இலகுவாக பெண்களை அடிமைகளாக விற்கின்றனர்.
ரணில் விக்ரமசிங்க என்பவர் படைக்கும் கடவுள் அல்ல. அவரால் பெரிதாக எதனையும் செய்ய முடியாது.
புதிய விடயங்கள் எதுவுமில்லை. அவரது பழைய குட்டை கவுனையே அனைவருக்கும் அணிவிக்க பார்க்கின்றார். அது நடக்காது எனவும் விஜித் விஜயமுனி சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.