அரசு – தமிழர் தரப்பு பேச்சு கடந்த காலத்தைப்போல் குழம்பக்கூடாது!; சந்திரிகா வேண்டுகோள்

அரசு – தமிழர் தரப்பு பேச்சு கடந்த காலத்தைப்போல் குழம்பக்கூடாது!; சந்திரிகா வேண்டுகோள்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சை வரவேற்கின்றேன். கடந்த காலங்கள் போன்று இந்தப் பேச்சும் குழம்பிப் போகாமல் அதைத் தொடர வேண்டியது இரு தரப்பினரதும் பொறுப்பாகும்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணாமல் நாடு முன்னேற்றப் பாதையில் செல்லாது என்பதை நான் அன்று தொடக்கம் இன்று வரை எடுத்துரைத்து வருகின்றேன்.

எனது ஆட்சியில் அரசியல் தீர்வுக்காக என்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறேன். அந்த முயற்சி ஏன் பலனளிக்கவில்லை என்பதும், அதைக் குழப்பியடித்த தரப்பினர்கள் யார், யார் என்றதையும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.” – என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )