ஆஸி.யிலிருந்து யாழ்.வந்தவர் விமானத்தில் திடீர் உயிரிழப்பு

ஆஸி.யிலிருந்து யாழ்.வந்தவர் விமானத்தில் திடீர் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 10.35 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யூஎல் 605 என்ற விமானத்தில் வருகைத்தந்த 75 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த விமானம் தனது பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தின் பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதுடன், அவரது சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )