
ஜூன் 9 புதிய போராட்டம் ஆரம்பம்-மக்கள் விடுதலை முன்னணி
அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குரிமையை உறுதிப்படுத்துமாறு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி புதிய போராட்டத்தை ஆரம்பிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்தப்படவிருந்த நிலையில், தேர்தலை நடத்த பணமில்லை எனக்கூறி அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்தது.
எதிர்க்கட்சிகள் மற்றும் வேறு தரப்பினரும் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
நிதி நெருக்கடியை அடிப்படையாக கொண்டு இந்த சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்த முடியாது என அரசாங்கம் நீதிமன்றத்தில் கூறியது.
இதற்கு அமைய நிதி நெருக்கடியில் இருந்து மீள அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை கோரியதுடன் நிதியத்தின் உதவி கிடைத்து தற்போது மூன்று மாதங்கள் கடந்துள்ளன.
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக அமைதியாக இருந்து வந்த மக்கள் விடுதலைவ முன்னணி எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துமாறு கோரி மிகப் பெரிய போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
மாவட்ட மட்டத்தில் நாடு முழுவதும் போராட்டததை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
இறுதியில் அரசாங்கம் உணரும்படியான கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் மக்கள் விடுதலை முன்னணி முடிவு செய்துள்ளது.