போதகர் மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக காத்திருக்கும் அடியாட்கள்..! சஜித் மௌனமாக இருப்பது ஏன்.?

போதகர் மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக காத்திருக்கும் அடியாட்கள்..! சஜித் மௌனமாக இருப்பது ஏன்.?

நாடு திரும்பியவுடன் கிறிஸ்தவ போதகர் ஜெரோம் பெர்ணான்டோ மீது தாக்குதல் மேற்கொள்வதற்காக தனது ஆட்கள் காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் குரோதத்தையும் மத ஒற்றுமையின்மையும் தூண்டும் ஜெரோம் போன்றவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றவேண்டும் என்றும் மேர்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.

ஜெரோம் பெருமளவு டொலர்களை பெறுவதாகவும் இவரை போன்ற அறிக்கைகளை வெளியிடுகின்ற பலருக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகளவான நிதி கிடைப்பதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவரின் சகோதரி ஜெரோமை பின்பற்றுவதாகவும் மேலும் பல அரசியல்வாதிகளும் ஜெரோம் பெர்ணாண்டோவை பின்பற்றுவதாக மேர்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் ஜெரோம் தொடர்பான விவகாரங்களில் சஜித்தைப் போன்ற சில அரசியல்வாதிகள் மௌனம் காப்பதாக மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )