
பெண்களும் மன உறுதியும்
– கலைஅமுதினி –
பெண் ஒரு குடும்பத்தை கட்டியாளும் மன வலிமை கொண்டவள்.
ஆனால் இன்று தேசத்தைக் கட்டியாள்வதிலும் மனவலிமை கொண்டவளாக திகழ்கிறாள்.அவள் பார்வை தூரநோக்கோடான சிந்தனைகள் அவள் குடும்பத்தையும்,தேசத்தையும் கொண்டு செல்வதில் முன்னிற்கின்றன
எதையும் தன் மன பலத்தால் சாதிக்கும் திறமை கொண்டவள்.
ஆண்களை விட உடல் ரீதியாக பலவீனமாக இருந்தாலும்,மனவலிமையில் அவள் உறுதியானவள். உதாரணமாக தேசத்தைக் கட்டியெழுப்புவதில் .
, ஆண்களுக்கு மேலான மனவுறுதியோடு போராடினார்கள். சமுக பார்வையை பெண் மாற்றினாள்.தன் உரிமைக்காகவும்,நாட்டின் உரிமைக்காகவும் போராடினார்கள்.
இன்றைய சூழலில் பெண்களுக்கு எதிரான வன் கொடுமை கள் அதிகரித்து வருகின்றது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை இச் சமுகம் விரோதி போல பார்க்கிறது. அது தற்செயலாக ஏற்பட்ட விபத்து,அது ஆணாதிக்க சர்வாதிகார நிகழ்வு
ஒரு நாட்டில் யுத்தம் ஏற்பட்டாலும்,அந்நிய இராணுவம் உள் நுழைந்தாலும் பாதிக்கப்படுவது பெண்களே. பெண்கள் மீது வலிந்து திணிக்கப்படுகின்ற இச் செயலானது உடலளவில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அதனைக் கடந்து செல்வதற்கு பெண்கள்
மிகவும் போராட வேண்டி இருந்தது.
இவ் நூற்றாண்டின் உறுதிமிக்க பெண்களுக்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்பவர் கள் தமிழீழப் பெண்கள். இவர்கள் நாட்டுக்காக ஆயுதமேந்தி போராடினார்கள். தங்கள்
வலிமையை நிருபிக்க ஆண்களுக்கு நிகராக சமவலிமை தேவைப்பட்டது. ஒவ்வொரு விடயத்திலும்,மிகத் தெளிவுடன்,மன உறுதியுடனும் போராடி தேச விடுதலையில்,மற்றைய சமூகம் சார்ந்த பணியிலும்,தொழில் நுட்பத்துறையிலும் தமது அசைக்க முடியாத மனவுறுதியினால் முன்னேறி பல சாதனைகள் புரிந்தார்கள்.
ஆயுதமேந்தி போராடுவதில் மட்டுமன்றி நாட்டின் உள்ள சகலதுறைகளிலும்
மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்தார்கள்.
இச் சாதனை அவர்களின் இரண்டு தசாப்தங்களுக்கு மேலான மனவுறுதியின்
வெற்றியாகும்.பெண்களை மதிக்கும் எம் தேசிய தலைவர் காலத்தில் வரலாறு படைத்தார்கள் என்பது பொன்னெழுத்துக்களால் பறிக்கப்பட்ட வேண்டியவை.
கனவு கண்ட தேசமாக சம உரிமையுடன்,மனவலிமையுடன் போராடிய பெண்கள் இன்றைய யுத்த மௌனப்பின் பின்னால் மிகவும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.எந்த சமுதாயத்திற்காக மனவைராக்கியத்துடன் போராடினார்களோ,எந்த சமுதாயம் அவர்களை கௌரவித்ததோ அதே மக்களால் மிகவும் இழிவாக பார்க்க பட்டார்கள்,நடத்தப்பட்டார்கள். ஆனால் பெண்கள் எதையும் தாங்கி சகிப்புத்தன்மையுடனும் மனவுறுதியுடனும் தொடர்ந்து போராடினார்கள். போராட்ட காலத்தில் வாழ்ந்த பெண் தலைமையிலான குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் தம் குடும்பங்களைச் காப்பாற்ற இந்த நிமிடம் வரை மனவுறுதியுடன் போராடி வருகின்றார்கள். மனிதம் நிறைந்த பெண்களாக வாழ்கிறார்கள். காலவோட்டத்தில்
பெண்கள் மிகவும் துன்பச் சூழலில் வாழ்ந்தாலும்,யுத்த வடு தந்த குடும்ப சுமையை சுமந்து,தமது காணாமல் போன உறவுகட்காய் குரல் கொடுத்தும், அன்றாட வாழ்கை போராட்டங்களை சகித்துக் கொண்டு விழ விழ எழும் பீனிக்ஸ் பறவை போல,வருகின்ற
தடைகளை உடைத்து, மன உறுதியுடன் போராடுகின்றார்கள் இறுதியாக பெண்களின் மனவுறுதிக்கு அவர்களின் தாய்மையை ஒப்பிடலாம்.
கருவுற்ற நாளிலிருந்து பிரசவமாகும் வரை அவள் எதிர் நோக்கும் துன்பங்கள் ஆயிரமாயிரம். பிரசவத்தின் போது மறு ஜென்மம் எடுக்கின்றாள் ஆனால் அவள் மனவுறுதியை பாருங்கள். மீண்டும் ஒரு குழந்தைக்கு தாயாகி தன் மனவுறுதிக்கு சான்றாகிறாள்.
எனவே இச் சமுதாயம் பெண்களை இழிவு படுத்தாமல்,அவர்கள் தம் சுமைகளை சுமந்து மனவுறுதியுடன் போராடி வெல்லும் போது,உன்னால் உதவ முடியாவிட்டாலும் உபத்திரவம் கொடுக்காமல்,மனித நேயத்துடன், வாழ்வோம் .