
மக்களுடன் யார்?; மக்களுக்கு எதிராக யார்?; வாக்களிப்பு வெளிப்படுத்தும்
நாட்டின் பக்கம் நிற்பவர்கள் யார்,நாட்டைக் குழப்பும் கும்பலுடன் இருப்பவர்கள் யார் என்பதை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் . ஜனக்க ரத்னாயக்கவுக்கு எதிரான பிரேரணை மீதான வாக்களிப்பின் மூலம் மக்கள் கண்டுகொள்ளலாம். என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமைஇடம்பெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரடத்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் குடும்பத்தினருக்கும் பாராளுமன்றத்திற்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் , சட்டவிரோதமாக நடந்து கொண்ட எம்.பி.க்கு பாராளுமன்றத்திற்கு வந்து வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின் கட்டணம் அதிகரிக்கப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களின் பக்கம் இருந்து ஜனக் ரத்னாயக்க செயற்பட்டார் . அதேபோல், உயர்தர பரீட்சை இடம்பெறும் போது நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்தது. இதன்போது 24 மணி நேரம் மினசாரத்தை வழங்கவேண்டும் என 3இலட்சம் மாணவர்களுக்காக ஜனக ரத்னாயக்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்ததுடன் மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் சென்று முறையிட்டார்.
அதனால் ஜனக்க ரத்னாயக்க என்பவர் யார் என நாங்கள் பார்க்கவில்லை. அவரின் செயற்பாட்டை பார்த்தே, அவர் மக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் செயற்பட்டதாலேயே அவரின் பக்கம் இருப்பதற்கு நாங்கள் தீர்மானித்தோம். அத்துடன் 3இலட்சம் மாணவர்களுக்கு பரீட்சை காலத்தில் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்கவேண்டும் என தெரிவித்து வந்ததை அவருக்கு எதிரான குற்றச்சாட்டாக அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. இது தொடர்பில் நாங்கள் வெட்கப்படுகிறோம் என்றார்.

