இனவாத அரசியல் நோக்கங்களுக்காக மத சுதந்திரத்தை பயன்படுத்த இடமளிக்க வேண்டாம்

இனவாத அரசியல் நோக்கங்களுக்காக மத சுதந்திரத்தை பயன்படுத்த இடமளிக்க வேண்டாம்

மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அனாதைளாகியுள்ள ஆட்சியாளர்கள் இறுதியாக பற்றி பிடிக்க முயற்சிக்கும் கொடி அடிப்படைவாதம் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் சமய சமூகங்களை அடிப்படையாக கொண்டு கடந்த சில மாதங்களாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

இதனால், ஏற்பட போகும் எதிர்கால அழிவுகளை தடுக்கவும் இதன் பின்னணியில்இருக்கும் அரசியல் விடயங்ளையும் தெளிவுப்படுத்துவது எமது கடமை.

மதக்குழுக்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு அது மோதலாக மாறலாம் என தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மிகவும் பழமையான வரலாற்றுடன் கூடிய பௌத்த, இந்து, கிறிஸ்தவ, கத்தோலிக்க, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் இருக்கின்றன.

ஒரு மோதலை தவிர ஏனைய அனைத்தும் புதிய வழிபாட்டு தலங்களை நிர்மாணித்தல் அல்லது மாற்றும் முயற்சி அல்லது புதிதாக அடையாளம் காண்பதை அடிப்படையாக கொண்டு ஏற்பட்டுள்ளன.

இப்படியாக ஏற்படும் மோதல்கள் அடிப்படையான மோதல்களாக மாறிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

எமது நாட்டு மக்கள் மனதில் இனவாத மதவாத கருத்துக்கள் பதிந்துள்ளன.

பெரும்பான்மை மக்களுடன் கலாசார ரீதியான வேறுபாடுகளை கொண்ட சிறிய மக்கள் குழுக்கள் இருக்குமாயின் அந்த சிறிய குழுக்களுக்கு அழுத்தங்களை இருப்பதை நாங்கள் காண்கின்றோம்.

சில இடங்களில் இந்த சிறிய மக்கள் குழுக்களுக்கு கஷ்டங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

அவற்றை மோதலாக மாற்றி மத குருமார் தமது தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றி கொள்வதை நாங்கள் காண்கின்றோம்.

வடக்கு மாகாணத்தில் பிரதேச அரசியல் கட்சிகளுக்கு இடையிலான அதிகார போட்டியின் மூலம் மோதல்களை ஏற்படுத்தி அந்த குற்றச்சாட்டை வேறு அணிகள் மீது சுமத்துவதும் தெளிவாகியுள்ளது.

எமது அரசியலமைப்புச் சட்டத்தில் மததத்தை பின்பற்றும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் இந்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

வர்த்தக, தனிப்பட்ட, இனவாத அரசியல் போன்ற நோக்கங்களுக்காக மத சுதந்திரத்தை பயன்படுத்த இடமளிக்க வேண்டாம் என நாங்கள் மக்களிடம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

இதன் மூலம் முழு நாட்டு மக்களுமே இழப்பீட்டை செலுத்த வேண்டியேற்படும் எனவும் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )