முள்ளிவாய்க்காலை நோக்கி செல்லும் ஊர்தி பவனி!

முள்ளிவாய்க்காலை நோக்கி செல்லும் ஊர்தி பவனி!

இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவுகளை தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ஆம் திகதி தொடங்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களால் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியிலிருந்து முள்ளிவாய்க்கால் மண்ணினை எடுத்து தொடங்கிய இந்த ஊர்திப் பவனியானது வவுனியா சென்று மன்னார் சென்று அங்கிருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகரை அடைந்து மாங்குளம் கிளிநொச்சி பூநகரி சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்து.

அங்கும் பல்வேறு இடங்களுக்கும் சென்று இன்று 6 வது நாள் பயணம் காலை வரணி மத்திய கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பமானது. இந்த ஊர்தி பவனியானது கொடிகாமம் பளை பரந்தன் தர்மபுரம் விசுவமடு ஊடாக வள்ளிபுனம் பகுதியை சென்றடைந்தது.

இதனை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலை வள்ளிபுனம் செஞ்சோலை வளாக சந்தியில் இருந்து ஆரம்பமாகிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு சந்தி சென்று அங்கு இருந்து மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் அடங்கிய மாபெரும் வாகன பேரணியாக முள்ளிவாய்க்கால் சென்றடையவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )