தமிழ் கூட்டமைப்புக்காகவா ஆளுநர்கள் நீக்கப்பட்டார்கள் ?

தமிழ் கூட்டமைப்புக்காகவா ஆளுநர்கள் நீக்கப்பட்டார்கள் ?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக ஆளுநர்களை நீக்கியதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன என்றால் தமிழ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் வடமேல் மாகாணத்தில் இல்லை. என்பதனை அவர்களுக்கு தெரியப்படுத்துகின்றேன் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் கூறுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக ஆளுநர்களை நீக்கியதாக எதிர்க்கட்சிகள் கதைப்பதாகவும் மிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவது உண்மையா என்றும் இங்கு ஊடகவியலாளர்களான நீங்கள் கேட் கின்றீர்கள்,

போராட்டத்தின் போது என்ன நடந்தது? போராட்டத்தின் போது காலி முகத்திடலில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லையா? சிங்கள இனம் இல்லை, மதம் இல்லை, இந்த நாடு இப்படித்தான் இருக்கிறது என்று பிக்குமார்கள் பேசவில்லையா. அப்போது யாரும் அதை எதிர்க்கவில்லை. ஒரு அரசு ஏதாவது செய்ய முயலும்போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்கிறார்கள். விகாரை, தேவாலயம் ,கோயில்,பள்ளிவாசல் எல்லாம் போராட்டத்தில் இருந்தன . அதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைவரும் இருந்தனர். அப்போது அது நல்லது ஆனால், அரசு சில ஏற்பாடுகள் செய்து தீர்வு காணப் போகும் போது, மட்டும் எதிர்க்கட்சிகள் சத்தம் போடுகிறார்கள். ஆனாலும் நாட்டு மக்கள் இதில் புத்திசாலிகள் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )