ஜனாதிபதி வேட்பாளராக சஜித்

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்

எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதாசவை தமது கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிற்ற ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதில் அரசியலமைப்பில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர் தமது பதவி காலம் நிறைவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல தற்போதைய அரசியலமைப்பு திருத்தத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.

எனினும், மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி ஒருவருக்கு அத்தகைய அதிகாரம் அரசியலமைப்பில் இல்லை என சில கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழலில் அது குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எனவே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எஞ்சிய பதவிக் காலத்தை நிறைவு செய்ய நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லும் அதிகாரத்தை வழங்கும் வகையில், அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )